சுவிஸ் அதிபருடன் தொலைபேசியில் டொனால்ட் டிரம்ப் நடத்திய முறைகேடு – தகவல்கள் வெளிச்சம்
ஜூலை இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சுவிட்சர்லாந்து அதிபர் கரின் கெல்லர்-சுட்டர் இடையிலான தொலைபேசி உரையாடல் எவ்வாறு சிக்கலான நிலையில் முடிந்தது என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் ஊடகங்கள் விரிவான தகவல்களை வெளிப்படுத்தின.
சுவிட்சர்லாந்துக்கு சாதகமான வரி ஒப்பந்தத்தை பெறுவதற்காக கெல்லர்-சுட்டர் டிரம்ப்பை தொடர்புகொண்டபோது, அவர் மிரட்டும் போக்கிலும், நேரடியாக பணம் கோரியதும், தனது குழுவினரிடமே மரியாதையற்ற விதத்தில் நடந்துகொண்டதும் ஊடகங்கள் கூறுகின்றன.
$40 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை குறிப்பு
அமெரிக்க நிர்வாகத்தின் “நன்கு அறிந்த வட்டாரங்கள்” தெரிவித்ததின்படி, டிரம்ப் சுவிட்சர்லாந்து காரணமாக அமெரிக்காவுக்கு $40 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என எரிச்சலுடன் குறிப்பிட்டதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், கெல்லர்-சுட்டர், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து சந்தை அளவுகள் மிகவும் வேறுபட்டவை என்பதால் “வர்த்தக பற்றாக்குறை என்பது அமெரிக்காவுக்கான இழப்பாக கருதப்படக்கூடாது” என்று விளக்கினார். இதுவே டிரம்ப்பை மேலும் கோபமடையச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“ஐரோப்பிய ஒன்றியம் 600 பில்லியன் டாலர் தருகிறது, நீ எவ்வளவு தரப்போகிறாய்?”
மேலும், டிரம்ப் உரையாடலின் போது, “ஐரோப்பிய ஒன்றியம் எனக்கு 600 பில்லியன் டாலர் கொடுக்கிறது. நீ எவ்வளவு தருவாய்?” என்று கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் கூறுகின்றன.