சுவிஸில் மீண்டும் தலைதூக்கும் தொலைபேசி மோசடி : போலீசார் விடுத்த எச்சரிக்கை
சமீபத்தில் தொலைபேசி மூலம் நடைபெறும் மோசடிகள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்றன. மோசடிகள் தங்களை போலீஸ் அதிகாரிகள், தலைமை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அல்லது அவசரத்தில் சிக்கிய குடும்பத்தினர் எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.
பிறகு, “உங்கள் குடும்பம் ஆபத்தில் இருக்கிறது”, “உடனடியாக பணம் செலுத்த வேண்டும்”, “போலீசுக்கு உதவ வேண்டும்” போன்ற கதைகளைச் சொல்லி, பல மணி நேரம் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு பயமுறுத்தப்பட்டவர்கள், இறுதியில் தங்கள் சேமித்த பணம், நகை அல்லது மதிப்புள்ள பொருட்களை கையளிக்க நேரிடுகிறது. ஜூலை மாத இறுதியிலிருந்து, துர்காவில் மட்டும் நான்கு முறை இவ்வகை மோசடிகள் வெற்றியடைந்துள்ளதாக துர்காவ் கன்டோனல் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“இந்த மோசடிகள் குறிப்பாக மூத்த குடிமக்களை குறிவைக்கலாம். விழிப்புணர்வும் எச்சரிக்கையும் மட்டுமே பாதுகாப்பு”, என துர்காவ் போலீசார் வலியுறுத்துகின்றனர்.