ஜெனீவாவில் பாட்டியைக் கத்தியால் குத்திக் கொன்றதாக பேத்தி கைது
ஜெனீவாவில் கடந்த இரவு 78 வயது பாட்டியைக் பல முறை குத்திக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 34 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் பாதிக்கப்பட்டவரின் இல்லத்தில் நடைபெற்றது. பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தேக நபர், ஜெனீவா Eaux-Vives ரயில் நிலையம் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நள்ளிரவில் எச்சரிக்கை
இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கை தகவல் நள்ளிரவு கடந்த சிறிது நேரத்தில் வந்ததாக ஜெனீவா பிரசிக்யூஷன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு போலீசார், கன்டோன் பிரசிக்யூஷன் அதிகாரிகளுடன் இணைந்து சம்பவத்தின் சூழ்நிலைகளைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.