ஃப்ரெய்பூர்க் கான்டோனில் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய கார் : இருவர் காயம்
ஃப்ரெய்பூர்க் கான்டோன் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, புல்லே நகர புறப்பகுதியான லா டூர்-டி-ட்ரேம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கடுமையான சாலை விபத்தில், 22 வயது இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆரம்பக் கணிப்புகளின்படி, அந்த இளைஞர் ஓட்டிய கார் இதுவரை தெரியாத காரணத்தால் திடீரென எதிர்பாதைக்கு சென்று விட்டது. அந்த சமயம், ஃப்ரெய்பூர்க் போக்குவரத்து நிறுவனம் (TPF) சார்ந்த ஒரு பேருந்து எதிரே வந்தது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோத, அதிர்வால் கார் சாலையிலிருந்து பல மீட்டர் தள்ளி கீழே விழுந்து, தலைகீழாக புரண்டது.

விபத்துக்குப் பிறகு, அந்த சாலை நான்கு மணி நேரம் முழுவதும் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. சம்பவத்துக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
@Kapo FR