துர்காவ் கன்டோன் Kreuzlingen இல் காரில் திருடமுயன்ற நபர் கைது
வெள்ளிக்கிழமை இரவு, துர்காவ் கன்டோன் காவல்துறையின் பணியாளர்கள் Kreuzlingen னில் ஒரு வாகன கொள்ளையனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இரவு 11:45 மணியளவில், ( Reutistrasse) ரியூடிஸ்ட்ராஸ்ஸில் ஒரு நபர் வாகனங்களை சோதனை செய்வதாக துர்காவ் கான்டன் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது.
துர்காவ் கன்டோன் காவல்துறையின் பணியாளர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று, சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை கண்டறிந்து கைது செய்து சோதனை செய்தனர்.
அதன்போது 38 வயதான மொராக்கோ நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்படவுள்ளது.