சூரிச் விமான நிலையத்தில் ரயில் சேவை இடையூறு: அடுத்த வாரம் முதல் பராமரிப்பு பணி
சுவிஸ் தேசிய ரயில்வே (SBB) ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 3, 2025 வரை சூரிச் விமான நிலைய ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த காலகட்டத்தில், ஒரு தடம் மூடப்படுவதால், ரயில் அட்டவணையில் சில மாற்றங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, லௌசான்-சூரிச் HB-ரோர்ஷாக் திசையில் செல்லும் IC5 ரயில்கள், சூரிச் HB மற்றும் வின்டர்தூர் இடையே மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும், இதனால் சூரிச் விமான நிலையத்தில் நிற்காது.

சூரிச் HB-லிருந்து மியூனிக் செல்லும் EC ரயில்களும் சூரிச் HB மற்றும் வின்டர்தூர் இடையே மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும், இவையும் சூரிச் விமான நிலையத்தில் நிற்காது. மேலும், பாசல் SBB-யிலிருந்து சூரிச் விமான நிலையம் வரை செல்லும் IR36 ரயில்கள், சூரிச் ஓர்லிகானில் முடிவடையும், மேலும் சூரிச் ஓர்லிகான் மற்றும் சூரிச் விமான நிலையம் இடையே இரு திசைகளிலும் ரத்து செய்யப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கருத்திற்கொண்டு முன்கூட்டியே தங்களது பயணங்களை திட்டுமிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
@Keystone SDA