சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்த் பகுதியில் உள்ள (Mürren) மியூரனில் நிலநடுக்கம்
சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்த் பகுதியில் உள்ள மியூரன் (Mürren) அருகே திங்கட்கிழமை மதியம் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பகுதிகளில் பாறைகள் இடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதும், பெரிய சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் வடக்கு – தெற்கு திசையில் பரவி, பேசல் (Basel) முதல் சியோன் (Sion) வரை உணரப்பட்டதுடன், அருகிலுள்ள Sefinental பள்ளத்தாக்கில் பாறை இடிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் தொடர்பில் பிற்பகல் 3:30 மணி வரை 400-க்கும் மேற்பட்ட மக்கள் புகார்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், பெர்ன் கான்டன் பொலிஸாருக்கு பெரிய சேதம் தொடர்பான புகார்கள் எதும் வரவில்லை.
கடந்த வாரத்திலும் மியூரனில் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த செப்டம்பரில், 3.5 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டது. வாரங்கள், நாட்களில் பிந்தைய அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
• Bernese Oberland பகுதி, நில அதிர்வியல் ரீதியாக Valais, Basel, மற்றும் Graubünden போன்ற இடங்களுடன் ஒப்பிடப்படுகின்றது.
• இவை சுவிட்சர்லாந்தில் நில அதிர்வுக்கு அதிகபட்ச அபாயம் உள்ள பகுதிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.