சுவிட்சர்லாந்தில் பாலியல் சுரண்டலுக்குள்ளான 130 பேர் அடையாளம்
பாலியல் சுரண்டலை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், ஐரோப்பிய போலீஸ் அமைப்பான Europol ஒருங்கிணைத்த “Operation CHAIN” எனும் மாபெரும் சர்வதேச நடவடிக்கையில் சுவிட்சர்லாந்தும் கலந்து கொண்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்தில் உள்ள 11 கன்டோன்களிலுள்ள பார்கள், massage Spa உள்ளிட்ட 148 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 457 பேர் போலீசாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
அதன் மூலம் 130 பேர் சாத்தியமான பாலியல் சுரண்டலுக்குள்ளான மனிதக் கடத்தல் பாதிப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ருமேனியாவைச் சேர்ந்த சில சந்தேகப்படைக்கப்பட்ட நபர்கள் குறித்த விசாரணைகளின் காரணமாக, ருமேனிய போலீசாரும் நேரடியாக சுவிட்சர்லாந்தில் உள்ள விசாரணைகளில் கலந்துகொண்டனர். இது இந்த குற்றச்செயல்கள் சர்வதேச அளவில் தொடர்புடையவை என்பதற்கான முக்கிய சான்றாகும்.

சுவிட்சர்லாந்தின் பெடரல் போலீஸ் (Fedpol) இந்த நடவடிக்கையை தலைமைத்துவமாக நடத்தி வந்தது. இதன் மூலமாக, ஒவ்வொரு மாநில போலீசும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அனுபவமும், தகவல்தொடர்பு வலையமைப்பும் பலப்படுத்தப்பட்டது. வலைஸ் கன்டோனில் மட்டும் ஏழு Massage சாலூன்கள் சோதனை செய்யபட்டன. ஆனால், அங்கே நேரடியாக மனிதக் கடத்தல் தொடர்பான தடயங்கள் கண்டறியப்படவில்லை.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சட்ட ஒழுங்கு நிலைமை மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் வாழும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் விழிப்புணர்வையும் உருவாக்குவதுதான். பாலியல் தொழில்களில் குற்றவியல் சூழ்நிலைகளை எதிர்த்து, அவற்றில் சிக்கியவர்களுக்கு உதவ சுவிட்சர்லாந்து தொடர்ந்து தன்னிலை நிலைநாட்டுவதை இந்த நடவடிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.