சுவிஸில் முஸ்லிம் ஆசிரியை ஹிஜாப் அணிந்து வந்தமையால் பணி நீக்கம்
செயின்ட் காலனில் உள்ள எஷென்பாக் நகரின் ஒரு பள்ளி, ஒரு முஸ்லிம் ஆசிரியை ஹிஜாப் அணிந்து வருவதால், அவரை வேலைக்கு ஏற்க மறுத்துள்ளது.
இந்த ஆசிரியை அந்த பள்ளியில் பணியாற்ற விண்ணப்பித்ததும், மாணவர்களுக்கு “நடுநிலையான கல்வி” வழங்கப்படாது என்ற காரணத்தை முன்வைத்து, பல பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர்களின் அழுத்தம் காரணமாக, பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியைக்கு வேலை வழங்காத முடிவை எடுத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை செய்வதற்கான பொதுவான சட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், இத்தகைய சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்துள்ளன.

உதாரணமாக, 1997 ஆம் ஆண்டு ஜெனீவாவில், ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை வகுப்பின் போது ஹிஜாப் கழட்ட மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் இந்த முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தும், ஸ்விஸ் உச்ச நீதிமன்றம் அவரின் மனுவை நிராகரித்தது.
பின்னர், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், “பொதுப்பள்ளிகளில் மாணவர்கள் மதச்சார்பற்ற கல்வி பெறும் உரிமை, ஆசிரியின் மதத்தடுப்பு உரிமையைவிட முக்கியமானது” என்ற தீர்ப்பை வழங்கியது.
இந்த சம்பவம், மத மற்றும் கல்வி உரிமைகளுக்கிடையிலான குழப்பமான நிலையை மீண்டும் பேசுவதற்கான தேவை உள்ளதைக் காட்டுகிறது.