பேர்ன் இல் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேக நபர் கைது
2025, ஜூலை 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை, பெர்ன் நகரின் Looslistrasse பகுதியில் ஒரு ஆண்மீது தாக்குதல் நடந்து, அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாலை 6.15 மணிக்கு தாக்குதல் நடந்ததாக கன்டன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், Looslistrasse 72-ஆம் வீட்டு பகுதியில் ஒரு இளம் ஆணை காயமடைந்த நிலையில் கண்டனர்.
அவரை முன்னதாகவே அவசர மருத்துவ குழு முதலுதவி செய்து, பின்னர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

முதல் விசாரணைகளின்படி, இந்த தாக்குதல், ஒரு Mulit Bedrooms அடங்கிய வீடு மற்றும் அதன் படிக்கட்டில் நடந்த தகராறின் போது இடம்பெற்றது. இதில் தாக்கிய நபர் கத்தியைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர், 2025, ஜூலை 14ஆம் தேதி திங்கள் காலை கைது செய்யப்பட்டுள்ளார். தாக்கிய நபரும், காயமடைந்தவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்துள்ளனர் என காவல்துறை தெரிவிக்கின்றது.
பெர்ன் மிட்டெல்லாண்டு மாநில அரசு வழக்குரைஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், பெர்ன் கன்டன் போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
@Kapo BE