சுவிட்சர்லாந்தில் கார்களை திருடும் பிரஞ்சு குற்றவாளிகள் – போலீசாருக்கு பெரும் சவால்!
சமீபமாக சுவிட்சர்லாந்தில், குறிப்பாக ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு மொழிபேசும் பகுதிகளில் உள்ள கார் ஷோரூம்களிலிருந்து பல வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டுகள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் சிறுவர்கள் கூட தொடர்புடையதாக தெரியவந்துள்ளது.
இந்த திருடர்களின் நடவடிக்கைகள் ஒரு ஹாலிவுட் திரைப் படம் போல் மிகவும் ஆபத்தானதாகவும், அதிரடியாகவும் நடைபெறுகின்றன. போலீசாரைச் சுற்றிவளைத்து வாகனத்தில் வேகமாக தப்பிக்க முயற்சிக்கின்றனர். சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் இது நேரடி ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இவர்கள் எந்த பயமும் இன்றி தப்பிக்கிறார்கள். இதன்போது போலீசாரும், பொதுமக்களும் ஆபத்தில் சிக்கி விடுகிறார்கள்,” என வாட் கன்டோன் காவல்துறையின் முதல் லெப்டினன்ட் டேவிட் தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் எல்லைப் பகுதியிலும் உச்சக் கண்காணிப்பை தேவைப்படுத்துகின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போலீசார் இணைந்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கைதானவர்கள் சிலர் குறைந்தவயதினர் என்பதால், நீதிமுறை பிரச்சினைகளும் உருவாகி வருகின்றன.
இவ்வாறு, கார் திருட்டு சம்பவங்கள் சுவிட்சர்லாந்தில் காவல்துறைக்கு புதிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்தும் முயற்சிகள் தொடருகின்றன.
@Keystone SDA