Gotthard சுரங்கத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – பாறை சிக்கல்கள் காரணம்!
சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான போக்குவரத்து கட்டமைப்பான இரண்டாவது Gotthard சாலை சுரங்கத் (Road Tunnel) திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதிர்ச்சி அளிக்கும் பாறை அமைப்பு, நிலைத்தன்மை இழந்த நிலம் மற்றும் அடிக்கடி ஏற்படும் வெற்றிடங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிகப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த திட்டத்தில் சுரங்கம் குடையும் இயந்திரம் (‘Boring Machine’) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது எதிர்பாராத நில அமைப்புகள் காரணமாக அந்த இயந்திரத்தை அங்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட முறையை இனி சில நூறு மீட்டர் வரை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது, சுரங்கம் உருவாக்கும் பணிக்காக துளை போடுதல் (drilling) மற்றும் வெடிவைத்தல் (blasting) ஆகிய முறைகள் மீண்டும் கொண்டு வரப்படவுள்ளன.
இந்த மாற்று நடவடிக்கை காரணமாக திட்டத்திற்கு சுமார் 8 மாதங்கள் தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் அறிவிக்கின்றனர். இதனுடன் கூடுதலாக CHF 20 மில்லியன் செலவாகும்.
இது போன்ற சிக்கல்களையும் மீறி, சுரங்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றும், மொத்த திட்டத் தொகையான CHF 2 பில்லியனை மீறாது என்றும், சுவிட்சர்லாந்தின் Federal Roads Office உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்த இரண்டாவது Gotthard சுரங்கம், வருங்காலத்தில் சுவிட்சர்லாந்தின் போக்குவரத்தை அதிகம் தளர்த்தும் மற்றும் பாதுகாப்பானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@WRS