ஆர்காவ் மாகாணத்தில் கார் பார்க்கிங்கில் பயங்கர தீ விபத்து.!
2025 ஜூலை 2-ஆம் தேதி புதன்கிழமை, ஆர்காவ் கன்டோனில் உள்ள மொஹ்லின் நகரில் உள்ள அஹோர்ன் தெருவில் இருக்கும் ஒரு குடியிருப்பு வளாகத்தின் அடித்தள கார் பார்க்கிங் பகுதியில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாலை சுமார் 11:30 மணிக்கு குடியிருப்பாளர்கள் புகையைக் கண்டதும் தீயணைப்பு துறை மற்றும் அவசர சேவைகளை அழைத்தனர். மொஹ்லின் மற்றும் ரைன்பெல்டன் தீயணைப்பு படையினர் சுமார் 100 பேர் மற்றும் 10 வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் முகமூடி அணிந்து, கார்ப்பகத்தில் புகையால் நிறைந்த இடத்தில் மூன்று கார்கள் பற்றி எரிவதை கண்டனர். தீ மற்றும் புகை காரணமாக அருகிலுள்ள மூன்று குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 70 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ ஏற்பட்ட பகுதிகளில் மின் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

குறித்த தீ விபத்தில் மூன்று கார்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. குறித்த கார் பார்க்கிங்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருந்தன. அவற்றில் பெரும்பான்மையான வாகனங்கள் தீ மற்றும் புகை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீயின் காரணம் இன்னும் தெரியவில்லை. ஆக்ராவ் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இதற்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர்.
பொதுமக்கள், எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும் வேண்டப்படுகின்றனர்.
@Kapo AG