சுவிட்சர்லாந்தில் “Spitex” நிறுவனத்தின் பெயரில் போலி அழைப்புகள் : எச்சரிக்கை.!!
சுவிட்சர்லாந்தின் சூரிச் கன்டோனில் இயங்கும் ஸ்பைடெக்ஸ் Spitex Association தனது பெயரில் வரும் போலி அழைப்புகள் குறித்து சூரிச் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
அழைப்புகள் “Spitex” (ஸ்பிட் டெக்ஸ்) என்ற நம்பிக்கைக்குரிய சுகாதார பராமரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடைபெறுகின்றன. அழைப்பாளர்கள், சில நேரங்களில் வெளிநாட்டு உச்சரிப்புடன், “ஹெல்த் செக்” (Health Check) ஒன்றை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறி வீட்டின் முகவரியை கேட்டுக்கொள்கிறார்கள்.
இவ்வாறான அழைப்புகள் பெரும்பாலும் “058 502” தொடக்கமுள்ள எண்களிலிருந்து வருகின்றன.

️எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்:
அழைப்புத் தொலைபேசி எண் சாதாரணமல்லாத எண்ணிலிருந்து வருகிறது. அழைப்பாளர் Spitex என்ற பெயரை கூறினாலும், அவரது பேசும் முறை சந்தேகத்திற்குரியது. அழைப்பாளரின் பெயரோ குரலோ அறிமுகமற்றது. ஜெர்மனிய மொழி முறையாக பேசப்படுவதில்லை. வீட்டு முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை கேட்கிறார் — உண்மையான Spitex இத்தகைய தகவல்களை கேட்பதில்லை. சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் Spitex நிறுவனத்தின் வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக உள்ளன.
Zurich Spitex நிறுவனத்தின் எச்சரிக்கை:
“இந்த வகையான போலி அழைப்புகள், பொதுவாக வயோதிபர்களை இலக்காகக் கொண்டவை. கடந்த காலங்களில், சுவிட்சர்லாந்தின் பிற மாநிலங்களிலும், இத்தகைய மோசடி அழைப்புக்களின் மூலம் விலைமதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என Spitex நிறுவனத்தினர் எச்சரிக்கின்றனர்.
✅ சந்தேகமுண்டானால் என்ன செய்யலாம்?
உடனே அழைப்பை துண்டிக்கவும்.
Spitex நிறுவனத்தின் உங்களுக்குத் தெரிந்த, நம்பகமான எண்ணுக்கு மீண்டும் அழைக்கவும்.
மோசடி அல்லது குற்ற நோக்கத்துடன் அழைப்புகள் வந்திருக்கலாம் என சந்தேகம் இருந்தால், Zurich கன்டோன் காவல்துறையைத் தொடர்புகொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
@Blick