சுவிஸில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டில் கடுமையான வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் மற்றும் மீள்பயன்பாடு செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் சந்தைப் பயன்பாட்டில் கடந்த ஆண்டுகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சுவிஸ் சில்லறை வர்த்தக சங்கம் (Swiss Retail Federation) தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் மொத்தமாக 417.7 மில்லியன் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் விநியோகிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் அது 51.1 மில்லியனாக குறைந்துள்ளது – இது 88% வீழ்ச்சி என தெரிவிக்கப்படுகிறது.
மீள்பயன்பாட்டு பைகளும் 65% குறைந்துள்ளன 2020-2024 காலக்கட்டத்தில், மீள்பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு 48.8 மில்லியனில் இருந்து 16.2 மில்லியனாக குறைந்துள்ளது – இது 65% வீழ்ச்சி ஆகும்.

இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சில்லறை வணிக கூட்டமைப்பு (CI) மற்றும் சுவிஸ் சில்லறை சங்கம் இடையில் கையெழுத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களேயாகும்.
- ஒற்றை பயன்பாட்டு பைகளின் பயன்பாட்டை 2025 இறுதிக்குள் 70%-80% குறைக்கும்.
- மீள்பயன்பாட்டு பைகளின் பயன்பாட்டை 35% குறைக்கும்.
இந்த இலக்குகள் எளிதாகவே அடையப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் பைகள் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் நிலை தற்போது நிலைத்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.