சுவிட்சர்லாந்தில் யூலை 1 முதல் மாறப்போகும் விடயங்கள் தொடர்பில் அறிவிப்பு
இன்று ஜூலை 1 முதல் சுவிட்சர்லாந்தில் சில புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இது மின்சார சைக்கிள்கள், வாகன ஓட்ட அனுமதி பயிற்சி, சுகாதாரக் காப்பீடு மற்றும் போலி பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை உள்ளடக்கியது.
முதல் பெரிய மாற்றம் வேகமான மின்சார சைக்கிள்கள் (fast e-bikes) தொடர்பானவை. இவை தற்போது moped என்ற வகையாக நியமிக்கப்படும். அதாவது, இவை ஓடுவதற்கு லைசன்ஸ் பிளேட் அவசியம். இந்த வகை e-bike, வழக்கமான சைக்கிள்களை விட வேகமாக ஓடும். இனிமேல், எந்த சாலையில் moped ஓட தடை இருக்கிறதோ, அங்கு fast e-bike ஓடக்கூடாது. சில சாலைகளில் மட்டும் இது விதிவிலக்காக அனுமதிக்கப்படும்.
அடுத்து, புதிய வகையான “heavy e-bikes” என்ற கம்பீரமான மின்சார வாகனங்கள் அறிமுகமாகின்றன. இதில் மூன்று அல்லது நான்கு சக்கரங்கள் இருக்கலாம். இவை 450 கிலோ எடையும், 25 கிமீ வேகம் வரை செல்லும் திறனும் கொண்டது. இவையும் தனி வகையாக சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்ட அனுமதி (driving license) பயிற்சி வகுப்புகளில் இனிமேல் புதிய பாடங்கள் சேர்க்கப்படும். குறிப்பாக, ஆட்டோமேட்டிக் கார் ஓட்டும் போது இருக்கும் உதவிகள் பற்றி கற்றுத்தரப்படும். உதாரணமாக, lane assist, automatic cruise control போன்ற தொழில்நுட்பங்கள் எப்படி வேலை செய்கின்றன, அவற்றின் நல்லவை மற்றும் தீங்குகள் என்ன என்பதையும் கற்றுக்கொடுக்கப்படும்.
மேலும், இனிமேல் போலி பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது. அவைகளை வழக்கமான நேரத்தை வீணாக்காமல் நேரடியாக அழிக்க முடியும்.
சுகாதாரக் காப்பீடு தொடர்பிலும் சலுகைகள் அதிகரிக்கப்படுகின்றன. இனிமேல், குடல் புற்றுநோய் பரிசோதனை (colon cancer screening) வலயத்தை அதிக வயதுடையோர் மற்றும் சில நீண்டநாள் நோயாளிகள் வரை விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நிலையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய கட்டாயம் குறைக்கப்படுகிறது.
இந்த புதிய விதிகள், மக்கள் பாதுகாப்பையும், சுகாதார நலனையும் மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
@WRS