பாசல் உயிரியல் பூங்காவில் வாழ்ந்த ஆண் கொரில்லா மரணம்
பாசல் உயிரியல் பூங்காவில் (Zoo Basel) வாழ்ந்த முக்கிய ஆண் கொரில்லா குரங்கு கடந்த 27ம் திகதி காலை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான இந்த குரங்கு, பல மாதங்களாக பராசீட்டிக் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது, மருத்துவத்தால் நிவாரணம் பெற்றாலும், சமீபத்தில் உடல் நிலை மோசமடைந்ததால், மருந்து மூலம் தூங்கவைக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2024ல் கண்டறியப்பட்ட நோய் – ஆரம்பத்தில் சீரான நிலை
குறித்த கொரில்லாவுக்கு ஏற்பட்ட பராசீட்டிக் தொற்று கடந்த மார்ச் 2024ல் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில், தகுந்த மருந்து சிகிச்சை வழங்கப்பட்டதனால், அவர் நிலைமைக் கணிசமாக கவலைக்குரியதாக இருக்கவில்லை. ஆனால், 2025 ஜூன் 18ஆம் தேதியிலிருந்து அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமாக தொடங்கியது. அவர் உணவு மற்றும் தண்ணீர் சாப்பிட மறுத்து, மிகவும் பலவீனமடைந்தார்.

1999 பிப்ரவரியில் நெதர்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பிறந்த குரங்கு, 2014ஆம் ஆண்டு பாசல் பூங்காக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த கொரில்லா குரங்கின் உயிரிழப்பு, பாசல் உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கும், பூங்கா பார்வையாளர்களுக்கும் மிகுந்த இழப்பாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக குரங்கு அமைதி, ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்காக ஒவ்வொருவரிடமும் நினைவில் நிலைத்து நிற்கும் எனவும் பூங்கா நிர்வாகம் கவலையுடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.