சுவிட்சர்லாந்தில் கடும் வெப்ப நிலை அபாய எச்சரிக்கை வெளியீடு!
சுவிட்சர்லாந்து முழுவதும் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஞாயிற்றுக்கிழமை முதல், ஃபெடரல் கவர்மென்ட் (Bund), நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்காக இரண்டாவது உயர்ந்த நிலையில் வெப்ப அபாய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் 35°C வரை வெப்பம் எதிர்பார்ப்பு
MeteoSchweiz அறிவித்ததின்படி, வாலிஸ் (Wallis), ஆல் பென்சூட் (Alpensüdseite), மற்றும் ஜெனீவா ஏரிப்பகுதி (Genferseeregion) ஆகியவற்றில் ஏற்கனவே வெப்பச்சலனம் சனிக்கிழமை முதல் தொடங்கி உள்ளது. இப்போது, ஞாயிற்றுக்கிழமை முதல், இந்த வெப்பநிலை சுவிட்சர்லாந்தின் பிற கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் அடியெடுத்து வைக்கிறது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பின் படி,
-
அல்ப்ஸ் தெற்குப் பகுதி, வாலிஸ், ஜெனீவா ஏரிப்பகுதியில் வெப்பம் 32°C முதல் 34°C வரை இருக்கும்.
-
Swiss ஜெர்மன் பேசும் பகுதிகள் மற்றும் Basel நகரில் 33°C – 35°C வரை அதிகரிக்கலாம்.
அதிகரிக்கும் வெப்பத்துடன் கூடவே, நாட்கள் மட்டுமன்றி இரவுகளும் சுழற்சி இல்லாமல் சூடாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது – இரவில் வெப்பநிலை 20°C கீழ் செல்வதற்கும் வாய்ப்பில்லை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் இரவு வெப்பம் மேலும் அதிகம்
சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், இரவின் குறைந்தபட்ச வெப்பநிலை 17°C முதல் 21°C வரை இருக்கக்கூடும்.
ஆனால், பெருநகர பகுதிகளில் (urban zones), கான்க்ரீட் மற்றும் பல்லாயிரக் கணக்கான கட்டிடங்களால், வெப்பம் அதிகமாக சேர்ந்து நிலைத்து விடுகிறது – இதனால், இரவில் கூட போதிய குளிர்ச்சியைப் பெற முடியாது.
எனவே மக்கள் வெப்பத்திற்கு ஏற்றவாறு உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க சரியான உணவு வகைகளை உண்ணுவதோடு அதிகம் நீர் அருந்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசிய தேவை இன்றி அதிகமாக வெளியில் செல்வதை தவிர்த்து வெப்ப அலைகளால் ஏற்படும் நோய்களை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.