வலைஸ் மாநிலப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை
மாணவர்கள் பள்ளியில் முழுமையாக கற்றலில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில், வலைஸ் (Valais) மாநில அரசு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இனிமேல், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளிலும் (public schools), மாணவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த முடியாது.
இந்தத் தடை வகுப்புகள் நடக்கும் நேரத்தில் மட்டும் அல்ல, இடைவேளைகளிலும், மதிய உணவு நேரத்திலும் கூட எல்லா வகையான மொபைல் சாதனங்களும் அடைத்தே இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“மாணவர்கள் கவனக் குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்” – கல்வி மந்திரி வருத்தம்
இந்த முடிவை அறிவித்த வலைஸ் மாநில கல்வித்துறை கவுன்சிலர் கிறிஸ்டோஃப் டார்பெலே (Christophe Darbellay) இது பற்றி குறிப்பிடுகையில்
“இப்போது அதிகமான மாணவர்கள் கற்றல் சிரமம், வாசிப்பு சிக்கல்கள், மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையை மோசமாக்கும் ஒரு முக்கிய காரணம் மொபைல் போன்கள், குறிப்பாக சமூக ஊடகங்களுடன் அதிக நேரம் செலவிடுவது மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.

“பள்ளி என்பது ஒரு வாழ்க்கை மையமாக இருக்க வேண்டும். அது அறிவைப் பெறவும் உதவ வேண்டிய இடம்.” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இது ஒரு முழுமையான எலக்ட்ரானிக் சாதனத் தடையாக அல்ல, என்பதைவும் டார்பெலே தெளிவுபடுத்தினார்.
“பாடங்களுக்காக தேவையான டேப்லெட்டுகள் (tablets) வகுப்பறையில் பயன்படுத்த அனுமதி தரப்படும். ஆனால், தனிப்பட்ட மொபைல் போன் பயன்படுத்தம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.” எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த முடிவு, சுவிட்சர்லாந்தில் கல்வி தரத்தைக் காக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
நவீன தொழில்நுட்பம் கல்வியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அதே நேரத்தில் அது மாணவர்களின் மனநலத்தையும் கல்வி ஒன்றிமைப்படுத்துவதிலும் சமநிலை தேவை என்பதை வலியுறுத்துகிறது.