Bern (பேர்ன்) அருகே பயங்கர தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உயிரிழப்பு.!!
Bern நகரத்திற்கு அருகிலுள்ள ஹெட்டிஸ்விலில் உள்ள ஒரு விலங்குகளுக்கான பாதுகாப்பு மையத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில், 100க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் முயல்கள் உயிரிழந்துள்ளன.
இந்த விலங்கு பாதுகாப்பு மையம் முக்கியமாக சிறு உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் இயங்கி வந்தது. தீ வேகமாக பரவியதால் அருகிலுள்ள ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்புக்கு தீக்காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அங்கு இருந்த குடியிருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

பல நகராட்சிகளைச் சேர்ந்த தீயணைப்பு படைகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீவிபத்தில் பல குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இவர்களுக்கு தற்காலிகமாக புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தீவிபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.