ஆர்காவ் சிறுமி கொலை : கொலையாளியின் தண்டனை தொடர்பில் தாய் வருத்தம்
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த கோரமான கொலைச் சம்பவம் தொடர்பான செய்தி சுவிஸ் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது மாணவியொருவர், தனது 14 வயது நண்பியால் குத்திக் கொல்லப்பட்டார். குற்றவாளி இந்த கத்தியை Migros என்ற கடையில் முன்பே வாங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில், பலருக்கும் அதிர்ச்சியளித்த உண்மை என்னவெனில், குற்றவாளியான அந்த 14 வயது சிறுமி, சில நாட்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பலர் கோபம் மற்றும் துன்பம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்ட சிறுமியின் தாயார், “நீதி கிடைக்கவில்லை… முழுமையாக நிராகரிக்கப்பட்டதாக” உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
@Blick
ஆனால், ஆனால், அவள் ஒரு சிறுமி என்பதால், அவளுக்கு தண்டனை விதிப்பதற்கு பதிலாக, அதிகாரிகள் அவளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க இருக்கிறார்கள். . சூரிச் மாநில சிறுவர் வழக்கறிஞர் அலுவலகத் தலைவர் பாட்ரிக் கில்லர் கூறும்போது, “இளம்வயதில் உள்ளவர்கள் பெரும்பாலும் திடீரென, உணர்வுப்பூர்வமாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது நீண்ட சிறைத்தண்டனை விதிப்பது சரியான வழி அல்ல ” என்றார்.
மேலும், சுவிட்சர்லாந்தின் இளம்பெண்கள் குற்றவியல் செயல்களில் ஈடுபடும் வீதம், ஆஸ்ட்ரியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
தற்போது அந்த குற்றவாளி மாணவி, ஒரு பாதுகாப்பான மனநல மருத்துவமனையில், சீராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவுகள், சுவிஸ் சிறுவர் நீதிமன்ற சட்டங்களில் மேலும் மாற்றம் தேவையா என்ற விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.