ஜெனீவாவில் சில டிராம் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
ஜெனீவாவில் இந்த கோடை காலத்தில் சில டிராம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா பொது போக்குவரத்துத் துறை (TPG) அறிவித்துள்ளதின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 28ஆம் தேதி காலை 4 மணி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 3:59 மணி வரை, டிராம் இலக்கம் 12 மற்றும் 18 சேவைகள் முழுமையாக இயங்காது.
இந்த இடைநிறுத்தத்தால் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில், ஜெனீவா பொது போக்குவரத்துத் துறை மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த சேவைகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய முழு விவரங்கள் ஜெனீவா பொது போக்குவரத்துத் துறை நிறுவனத்தின் இணையதளத்தில் (tpg.ch) பகிரப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் ஜெனீவா நகர மக்கள் மற்றும் பயணிகள், இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தங்களது பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்வது நல்லது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
@WRS