சுவிட்சர்லாந்தில் வெற்றிவாகை சூடிய மதிசுதாவின்; ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம்
உலகின் முதல் தர விருது விழாக்களில் ஒன்றான, சுவிற்சர்லாந்தில் இடம்பெறும் Fribourg International Film Festival இல் இலங்கையின் இளம் படைப்பாளி மதிசுதாவின் இயக்கத்தில் உருவான dark days of heaven எனப்படும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சுவிற்சர்லாந்தின் Fribourg International Film Festival இன் 39 வது திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் தாயகத்தில் கைத்தொலைபேசியில் முழுமையான காட்சிகளும் உள்ளடக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை Fribourg ARENA திரையரங்கில் மீண்டும் ஏற்பாட்டுக் குழுவினரால் திரையிடப்பட்ட குறித்த திரைப்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காட்சிப்படுத்தலை தொடர்ந்து பல்லின மக்களும் பார்வையிட்டு அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். குறித்த திரைப்படம் பற்றி அதன் படைப்பாளி மதிசுதாவின் கருதுக்கள் இதோ….