சுவிஸ் ஆல்ப்ஸில் பனிச்சரிவு அபாயம் அதிகரிப்பு : அதிகாரிகள் எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக சுவிஸ் ஆல்ப்ஸின் தெற்குப் பகுதியில் பனிச்சரிவு (Avalanche) அபாயம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பனி மற்றும் பனிச்சரிவு ஆராய்ச்சி நிறுவனம் (SLF) வழங்கிய தகவலின்படி, மாஜியா பள்ளத்தாக்கு (Maggia valleys), ரிவியரா (Riviera), லெவென்டினா பள்ளத்தாக்கு (Leventina), மற்றும் ப்லெனியோ பள்ளத்தாக்கு (Blenio Valley) ஆகிய பகுதிகளில் பனிச்சரிவு அபாயம் 4 நிலை (மிகவும் அதிகம்) என்ற அளவீட்டில் உள்ளது.

மற்ற பகுதிகளில் அபாய நிலை 3 (கருத்துக்கொள்ள வேண்டியது) என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பனிப் படலம் மற்றும், முந்தைய பனிப் படலத்தின் மீது நிலைமாறிய பனி (drifting snow) ஒட்டியிருப்பது போன்ற காரணிகளினால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளத.
இதனால், சுற்றுலாப்பயணிகள் மற்றும் குளிர்கால விளையாட்டு ஆர்வலர்கள் தனிப்பட்ட முறையில் செல்லும்போது பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
SLF வெளியிட்ட அறிக்கையின்படி, தானாகவே பனிச்சரிவு நிகழும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே, அறிவுறுத்தல் வழங்கப்பட்ட உரிய பனி பாதைகளை விட்டுவிட்டு வேறு இடங்களில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.