டிசினோவில் கார்னிவல்: நீச்சல் குளத்தில் வீழ்ந்த பசுவால் பரபரப்பு
டிசினோ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, 40 கால்நடைகள் அந்தப் பகுதியைச் சுற்றி ஓடின.
அடுத்த நாள் காலை, ஒரு வீட்டு உரிமையாளர் ஆச்சரியப்பட்டார்: ஒரு மாடு அவரது நீச்சல் குளத்தில் நின்று கொண்டிருந்தது. ஆரம்பத்தில் வேடிக்கையாகத் தெரிந்தது. ஆனால் உண்மையில் அது ஒரு தீவிரமான சூழ்நிலை. தண்ணீரிலிருந்து ஒரு பசுவை வெளியில் எடுப்பது என்பது இலகுவாக காரியம் அல்ல. அதற்கென தனியான இயந்திரங்கள் வரவழைக்கப்படவேண்டும்.

நிலமையை சீர்செய்ய விலங்கு மீட்பு சேவையான GTRD இன் மீட்புக் குழு விரைவாக உதவிக்கு வந்தது. ஒரு சிறப்பு வலை மற்றும் ஒரு டிராக்டர் பயன்படுத்தி, அவர்கள் கவனமாக குளத்தில் இருந்து பசுவை மேலே தூக்கினார்கள்.
“இந்த கதை வேடிக்கையானது, ஆனால் விலங்குகளுக்கு விரைவான உதவி எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது” என்று மீட்புக் குழுவைச் சேர்ந்த ஜோகிம் மோக் கூறினார். “பசுக்கள், குதிரைகள் அல்லது பிற விலங்குகள் – அவசர காலங்களில் காயங்களைத் தவிர்க்க தொழில்முறை மீட்பு தேவை.” என அவரது சக ஊழியர் ரூடி கெல்லர் மேலும் கூறினார்: