மிக்ரோஸ் வசம் இருந்த ‘ஹோட்டல் பிளான்’ வணிகம் விற்பனை
மிக்ரோஸ் “ஹோட்டல் பிளானை” (Hotelplan) ஜெர்மன் பயண நிறுவனமான (DERTOUR) டெர்டூருக்கு விற்றுள்ளது, அதே நேரத்தில் ஹோட்டல் பிளானின் முக்கிய அங்கமான Interhome, ஹோமெடோகோவால் ஊர்கு 150 மில்லியன் பிராங்குகளுக்கு கையகப்படுத்தப்படும்.
Glattbrugg ஐ தளமாகக் கொண்ட Hotelplan குழுமம் 20 நாடுகளில் இயங்கி 2024 இல் CHF 1.78 பில்லியன் வருவாயை ஈட்டியது. Interhome மட்டும் CHF 389.6 மில்லியனை ஈட்டியது. நிறுவனத்தின் பிற பகுதிகளில் Hotelplan Suisse, Hotelplan UK மற்றும் வணிக பயண நிறுவனங்களான Bta First Travel மற்றும் Finass Reisen ஆகியவை அடங்கும்.

ஹோட்டல் பிளானில் உள்ள 2,500 ஊழியர்களும் டெர்டூருக்குச் செல்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் முன்பதிவுகள் அப்படியே இருக்கும். ஹோட்டல் பிளான் பிராண்ட் அதன் புதிய உரிமையாளர்களின் கீழ் தனது பணியை தொடரும்.