சிகரட் துண்டால் ஏற்பட்ட விபரீதம் : முற்றிலும் எரிந்து நாசமான கார்.!! ஜனவரி 2, 2025, வியாழன் அதிகாலை சுமார் 2:10 மணியளவில், நீடெருர்னெனில் கார் தீப்பிடித்ததைப் பற்றி கிளாரஸ் கன்டோனல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
19 வயதான சாரதி ஒருவர் தனது 23 வயது பயணியுடன் Mürtschenstrasse இல் பயணித்துக் கொண்டிருந்த போது, பயணி ஒரு சிகரெட் துண்டு ஒன்றை கார் கண்ணாடியிலிருந்து வெளியே எறிய முயன்றார். மாறாக, சிகரெட் காரின் தரையில் விழுந்து தரை விரிப்பில் தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணி, ஓடும் காரில் இருந்து கீழே குதித்ததில், தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. டிரைவர் வேகமாக காரை நிறுத்திவிட்டு பத்திரமாக வெளியேறினார்.

சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. Niederurnen/Oberurnen தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
பயணி சிறிய காயங்களுக்கு உள்ளானார் மற்றும் மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளாரஸ் கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கார் முற்றிலும் சேதமடைந்ததுடன், சாலையின் மேற்பரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் 16 பேர் நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
(c) Kantonsspital Glarus