லுசேர்ன் ரயில் நிலையத்தில் பெண் மீது பாலியல் வல்லுறவு.!! கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லுசேர்ன் – Wolhusen ரயில் நிலையத்தில் ஒரு தீவிர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேரில் பார்த்த சாட்சியின்படி, அடையாளம் தெரியாத நபர் ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. லூசர்ன் காவல்துறை திங்களன்று இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நேரில் பார்த்த சாட்சியின்படி, அந்த நபர் அந்தப் பெண்ணைத் தாக்குவதை வேறொருவர் பார்த்தார். இந்த நபர் தலையிட்டு, தாக்கியவரை இழுத்துச் சென்று தண்டவாளத்தில் தள்ளினார். இதையடுத்து அந்த நபர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் போலீசார் அவரை நாய்களுடன் தேடுதல் நடத்தியும் நபர் இதுவரையில் சிக்கவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக லூசர்ன் போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வெளியிடப்படாது எனவும் போலீசார் தெரிவித்தனர். (c) Kapo Lu