Schaffhausen நகரம் – பல உணவகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!! வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024 அன்று இரவு முதல் நவம்பர் 23, 2024 சனிக்கிழமை வரை ஷாஃப்ஹவுசென் நகரில் பல உடைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். திருடர்கள் நான்கு உணவகங்கள் மற்றும் இரண்டு வணிக சொத்துகளை இலக்கு வைத்து தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்த சூழலில், காவல்துறை விழிப்புணர்வு பதாதைகளை பொது இடங்களிலும் வீதி அருகிலும் நிறுவி வருகின்றனர்.
Schaffhausen நகரில் உள்ள நான்கு உணவகங்கள் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளையர்களுக்கு பலியாகின. எல்லா சந்தர்ப்பங்களிலும், குற்றவாளிகள் ஒரு ஐன்னல்களை உடைத்து உள்நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது. பார்களில் இருந்த பல ஆயிரம் பிராங்குகள் மதிப்புள்ள பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் ஷாஃப்ஹவுசனில் இரண்டு வணிக சொத்துக்களை உடைத்தனர். கட்டிடத்திற்குள் நுழைவதற்காக ஒரு ஜன்னல் அடையாளம் தெரியாத பொருளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த வணிகச் சொத்துக்களில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் இன்னும் துல்லியமாக அடையாளம் காணப்படவில்லை. சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை அவதானிப்பவர்கள் உடனடியாக 117 என்ற போலீசாரின் அவசர இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் Schaffhausen காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குற்றவாளிகளை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு பொதுமக்களின் உதவியினையும் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(c) schaffhauser-polizei