Graubünden இல் ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயம்..!! கிறாவுன்டன் கன்டோனில் வெள்ளிக்கிழமை மாலை, 22.நவம்பர் 2024, Bivio க்கு அருகில் Julierstrasse இல் இரண்டு கார்களுக்கு இடையே ஒரு கடுமையான போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
#### விபத்து நடந்தது இப்படித்தான்:
குரோஷியா நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் எங்கடின் பகுதியை நோக்கி காரை ஓட்டிச் சென்றபோது, மாலை 6:45 மணியளவில் விபத்து நடந்தது. மேலும் வாகனத்தில் ஒரு பெண் உட்பட குழந்தை ஒன்றும் பயணித்துள்ளது.
அதே நேரத்தில், 51 வயதுடைய நபர் ஒருவர் எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருந்தபோது Marmorera (மார்மோரேரா) மற்றும் Bivio இடையே வலது வளைவில், எதிரே வந்தவர் பனி மூடிய சாலையில் கட்டுப்பாட்டை இழந்தமையினால் அந்த காருடன் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது.

#### காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
குரோஷிய சாரதியின் வாகனம் மோதியதில் அதில் பயணித்த பெண்ணும் குழந்தையும் காயமடைந்துள்ளனர். அவர்கள் குறிப்பிடப்படாத காயங்களுக்கு உள்ளாளாகியிருந்ததோடு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மற்றைய காரின் சாரதியான 51 வயதுடைய நபரும் காயமடைந்துள்ளார். Mittelbünden Rescue இலிருந்து ஆம்புலன்ஸில் சோதனைக்காக Thusis Hospital க்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
#### போக்குவரத்தில் பாதிப்பு
விபத்து காரணமாக, மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் முடியும் வரை ஜூலியர்ஸ்ட்ராஸ் சிறிது நேரம் மூடப்படவேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. விபத்துக்கான காரணத்தை சிறிது நேரம் மூடப்படவேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
Graubünden Cantonal Police தற்போது விபத்தின் சரியான சூழ்நிலையை விசாரித்து வருகின்றனர். பனி மூடிய சாலை விபத்துக்கான முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விசாரணைகளை போலீசார் தற்போது மேற்கொணடு வருகின்றனர்.
(c) Graubünden Cantonal Police