சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் : புதருக்குள் வைத்து பெண் பலாத்காரம் நவம்பர் 1 நள்ளிரவுக்கு பின்னர், Schaffhausen நகரில் ஒரு தீவிர சம்பவம் நிகழ்ந்தது. Ebnat ரவுண்டானா அருகே 22 வயது பெண் ஒருவர் இனந்தெரியாத ஒருவரால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
நள்ளிரவுக்குப் பிறகு, (Alpenblick) அல்பென்ப்ளிக் மாவட்டத்தில் உள்ள (Rhein-hardstrasse) ரெய்ன்ஹார்ட் ஸ்ட்ராஸ்ஸே வழியாக எப்னாட் நோக்கி அந்தப் பெண் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

Schaffhausen பொலிஸின் கூற்றுப்படி, Ebnat ரவுண்டானாவில் ஒரு ஆணால் அந்தப் பெண் பிடிக்கப்பட்டு அருகிலுள்ள புதர்களுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.. அங்குதான் குற்றம் நடந்தது. பின்னர் அந்த பெண்ணை கைவிட்டு மர்ம நபர் தெரியாத திசையில் தப்பியோடிவிட்டார்.
குற்றம் அல்லது குற்றவாளி பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய சாட்சிகளை போலீசார் இப்போது அவசரமாக தேடி வருகின்றனர். சம்பவத்தின் போது, அந்த நபர் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தை முற்றாக மறைத்து முகமூடி மூடியிருந்ததால், அவரை அடையாளம் காண முடியவில்லை.
சந்தேகத்திற்கிடமான ஒன்றை யாராவது பார்த்திருந்தால் அல்லது குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவும் தகவல் இருந்தால், +41 52 624 24 24 என்ற எண்ணில் ஷாஃப்ஹவுசென் காவல்துறையை அழைக்குமாறு போலீஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.
© Schaffhauser Polizei