Valais இல் 80 முதியவர் படுகொலை : மனைவி படுகாயம் Valais, கன்டோன் Sierre இல் ஞாயிற்றுக்கிழமை ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது, அங்கு 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் அவரது 77 வயது மனைவி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 59 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை Valais cantonal police இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

குடும்பங்களுக்கு இடையிலான சண்டையில் வாக்குவாதம் முற்றியநிலையில் குறித்த சோகம் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட மூவரும் சுவிஸ் குடிமக்கள் எனவும் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் துப்பாக்கி அல்ல என அறிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில், விசாரணை தொடரும் போது மேலும் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
©கீஸ்டோன்/எஸ்டிஏ