சென்ட்காலன் ஆம்டன் பகுதியில் விபத்து – இருவர் காயம் புதன்கிழமை (அக்டோபர் 30, 2024), காலை 11:05 மணியளவில், கன்டோன் சென்ட்காலனின் Amdenerstrasse (ஆம்டெனெர்ஸ்ட்ராஸ்ஸில்) இரண்டு கார்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் 63 வயதுடைய பெண் ஒருவரும் 61 வயதுடைய ஆண் ஒருவரும் லேசான காயமடைந்துள்ளனர்.
63 வயதான அவர் அவசர சேவைகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு கார்களும் கார்களும் பெரிய சேதங்கள் இன்றி தப்பியது.

ஒருவர் மற்றைய காரை முந்திச்செல்லும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் விளைவாக ர்சுமார் 80,000 பிராங்குகள் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(c) Kantonspolizei St.Gallen