ஷாஃப்ஹவுசென் மண்டலத்தில் வார இறுதியில் பல திருட்டுகள் கடந்த வார இறுதியில் (அக்டோபர் 26 மற்றும் 27) ஷாஃப்ஹவுசென் மாகாணத்தில் தொடர்ச்சியான கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. உணவகங்கள் மற்றும் தனியார் வீடுகள் ஆகியவற்றில் குறித்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஷாஃப்ஹவுசென் போலீசார் அறிவித்துள்ளனர்.
Schaffhausen நகரில் உள்ள ஒரு உணவகம் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கப்பட்டது. குற்றவாளிகள் பின் நுழைவாயிலை உடைத்து இரண்டு பெட்டகங்களையும் பல ஷாம்பானியா பாட்டில்களையும் திருடிச் சென்றனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு பல ஆயிரம் பிராங்குகள் ஆகும்.
மேலும் Trasadingen (டிரசாடிங்கனில்) இல் இரண்டு சம்பவங்கள் நடந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில் ஒரு குடும்பத்தின் வீடு உடைக்கப்பட்டது. திருடர்கள் மாடி ஜன்னல் வழியாக ஏறி வீட்டை சோதனையிட்டனர்.

பல ஆயிரம் பிராங்குகள் மதிப்புள்ள இரண்டு கேமராக்கள் மற்றும் துணைக்கருவிகளை திருடிச் சென்றனர். கூடுதலாக, மூன்று பேர் சனிக்கிழமை மாலை ட்ராசடிங்கனில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் நுழைய முயன்றனர், ஆனால் குடியிருப்பாளர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதும் தப்பிச் சென்றனர்.
இன்னுமொரு சம்பவமாக Ramsen (ராம்செனில்), பகுதியில் திங்கள்கிழமை இரவு மூன்று உணவகங்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்டன. அது மாத்திரமின்றி Hemishofen இல் (ஹெமிஷோஃபெனில்) உள்ள ஒரு பண்ணை கடையும் குற்றவாளிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
ராம்சென் மற்றும் ஹெமிஷோஃபெனில் நடந்த உடைப்புகளுக்கு அதே குற்றவாளிகள் தான் காரணம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இவ்வாறான தொடர் குற்றச்சம்பவங்கள் தொடர்பில் Schaffhausen காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. கடந்த சில நாட்களில் சந்தேகத்திற்கிடமான எதையும் பார்த்தவர்கள் +41 52 624 24 24 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.