சூரிச்சில் 9 பிராங்குகளை திருடி 2 மாதங்கள் சிறையில் இருந்த பிரான்ஸ் நாட்டவர் சூரிச்சில் உள்ள ஒரு Coop கடையில் 9 பிராங்குகளுக்கு குறைவான மதிப்புள்ள பொருட்களை திருடிய ஒரு பிரெஞ்சுக்காரர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார்.
இருப்பினும், அவரை இரண்டு மாதங்கள் சிறையில் வைத்தது திருட்டு சம்பவத்திற்காக அல்ல, திருடிவிட்டு அவர் தப்பிச் சென்றபோது கடை காவலாளியை தாக்கியதாக போலீஸார் குற்றம் சாட்டினர்.
திங்களன்றுஇ சூரிச் மாவட்ட நீதிமன்றம் அவரைத் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. ஆனால் திருட்டுக்காக அவருக்கு 300 பிராங்குகள் அபராதம் விதித்தது. அவர் ஏற்கனவே சிறையில் இருந்ததால், அதில் மூன்று நாட்கள் அபராதமாக கணக்கிடப்பட்டன. அவர் காவலில் இருந்த மீதமுள்ள 54 நாட்களுக்கு, அவருக்கு இழப்பீடாக 10,800 பிராங்குகள் வழங்கப்பட்டது.

சூரிச்சின் ரயில் நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள கூப் கடையில் ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்தது. மொத்தம் 8.85 பிராங்குகள் மதிப்புள்ள பயோ பால் பெட்டி, சீஸ் துண்டுகள் மற்றும் ரிவெல்லா பாட்டில் போன்ற பொருட்களை அந்த நபர் திருட முயன்றார். ஒரு கடை காவலாளி அவரை தடுத்து நிறுத்தினார், இது மோதலுக்கு வழிவகுத்தது.
எனினும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இறுதியில் அவர் கொள்ளைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறு திருட்டுக்காக தண்டனை பெற்றார். ஏற்கனவே தண்டனை முடிந்து விட்டதால்இ அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.