சுவிட்சர்லாந்தை கடக்கும் சூறாவளிக்காற்று : மக்களுக்கு எச்சரிக்கை இன்று ‘கிர்க்’ (Kirk) சூறாவளியின் எச்சங்கள் சுவிட்சர்லாந்தின் வடக்கே கடந்து செல்லும் எனவும் இதனால் நாட்டில் மழை மற்றும் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிஸ்கே விரிகுடாவில் இருந்து பிரான்ஸ் வழியாக பெனலக்ஸ் நாடுகளுக்கு நகரும் குறைந்த அழுத்த காற்று சில வேளைகளில் சுவிட்சர்லாந்தையும் பாதிப்படையவைக்ககூடும். சிலவேளைகளில் சில பகுதிகளில் கனமழையையும், சில இடங்களில் பலத்த புயல் காற்றையும் ஏற்படுத்தும்.
ஆல்பைன் பள்ளத்தாக்குகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 100 கிமீ வேகத்தில் வீசக்கூடும். அதே சமயம் மலை உச்சிகளில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். டிசினோ போன்ற தெற்குப் பகுதிகள் மற்றும் கிராவுண்டனின் சில பகுதிகள் 50 முதல் 90 மிமீ வரை மழை பெய்யக்கூடும்.

மற்ற ஆல்பைன் பகுதிகளில் 15 முதல் 40 மிமீ வரை மழை பெய்யும். தாழ்வான பகுதிகளில் 5 முதல் 10 மி.மீ மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மலைக்கு வடக்கேஇ இன்று வியாழன் அதிகாலையில் குளிர்ச்சியான பலத்த காற்று வீசியுள்ளது. ஜூரா மலைகளில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அதே சமயம் தாழ்வான பகுதிகளில் மணிக்கு 60 முதல் 90 கிமீ வேகத்தில் காற்றின் வேகத்தை காண முடியும். மீண்;டும் காலை சாதகமான நிலமை ஏற்டலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
MeteoSchweiz (admin.ch)