சூரிச்சில் குழுக்கழுக்கிடையே தகராறு : ஒருவர் மீது கத்திக்குத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சூரிச்சில் (Hohlstrasse/Langstrasse) ஹோல்ஸ்ட்ராஸ்ஸே/லாங்ஸ்ட்ராஸ்ஸே சந்திப்பில் 31 வயதான போலந்து நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டார்.
சூரிச் நகர காவல்துறையின் கூற்றுப்படி, அந்த நபர் கத்தியால் குத்தப்படுவதற்கு முன்பு மற்ற இரண்டு ஆண்களுடன் சண்டையில் ஈடுபட்டடுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் அவசர சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்தில் 22 மற்றும் 26 வயதுடைய சுவிஸ் நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதலின் பின்னணியில் உள்ள விவரங்கள் மற்றும் நோக்கங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது பற்றிய மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
சூரிச் நகர காவல்துறை, சம்பவத்தைப் பார்த்த அல்லது தொடர்புடைய தகவல்களைக் கொண்ட சாட்சிகளை வழங்குபவர்கள் போலீசாருக்கு தகவல் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.