வெளியே கத்தியுடன் சென்றால் ஆபத்து.! லுசேர்ன் போலீசார் எச்சரிக்கை சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருவது தொடர்பாக பலரும் கவலை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் லுசேர்ன் போலீசாரால் ஒரு புதிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியில் செல்லும்போது கத்திகளை எடுத்து செல்லவேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அக்டோபர் 11 ம் திகதி லுசேர்ன்னில் இது தொடர்பாக ஒரு விழிப்புணர் அமர்வு ஒன்று இடம்பெறவிருப்பதாகவும் அதில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
மேலும் உங்கள் அன்னை உங்களை சிறையில் சந்திப்பதை விரும்பமாட்டார் எனவே கத்திகளை வீட்டிலையே விட்டுவிட்டு வெளியே செல்லுமாறும் அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி இதோ உங்களுக்காக….
மேலும் தகவல் இங்கே .
ஆதாரம்: லூசர்ன் போலீஸ்