சூரிச்சில் ஒருவரைக் கைது செய்து ஒரு கிலோகிராம் கோகோயின் பறிமுதல் சூரிச் நகரப் பொலிசார் ஒருவரைக் கைது செய்து, கொக்கைன் மற்றும் பணத்தைக் கைப்பற்றினர்.
நேற்று வியாழக்கிழமை, இரவு 8 மணிக்குப் பிறகு, சூரிச் நகர காவல்துறையின் புலனாய்வாளர்கள், மாவட்டம் 1 இல் ஒருவரைச் சோதனை செய்தனர்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் மற்றும் பல ஆயிரம் பிராங்குகள் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது .
39 வயதான ஜெர்மானியர் கைது செய்யப்பட்டு சூரிச் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.