விமான மற்றும் ரயில் பயணங்களை விரிவுபடுத்தும் சுவிட்சர்லாந்து SWISS ஏர்லைன்ஸ் மற்றும் தேசிய இரயில் நிறுவனமான SBB ஆகியவை இன்று முதல் தங்கள் ஏர் ரயில் நெட்வொர்க்கில் நான்கு புதிய இடங்களைச் சேர்த்துள்ளன.
பயணிகள் இப்போது சூரிச் விமான நிலையத்திலிருந்து (Chur, Davos, Klosters மற்றும் St. Moritz) கூர், டாவோஸ், குளோஸ்ட்டர், மற்றும், சென் .மொரீட்ஸ் ஆகிய இடங்களுக்கு ஒருங்கிணைந்த ரயில் மற்றும் விமான சேவையைப் பயன்படுத்தி பயணிக்கலாம்.

இதன் மூலம் சூரிச் மற்றும் ஜெனிவா விமான நிலையங்களில் இருந்து வரும் விமான ரயில்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
ஏர் ரெயில் நெட்வொர்க் இப்போது முக்கியமாக சுவிட்சர்லாந்திற்குள் உள்ள நிலையங்களை உள்ளடக்கியது, ஆனால் ஜெர்மனியில் முனிச் மற்றும் ஆஸ்திரியாவின் ப்ரெஜென்ஸ் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.