மல்லோர்காவில் சுவிஸ் பெண் கொலை – 47 வயது போர்த்துகீசியர் கைது 74 வயதான சுவிட்சர்லாந்தை சேர்ந்த மாமியாரை கோடரியால் கொன்றதாக 47 வயதான போர்த்துகீசிய நபரை மல்லோர்காவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்மாவில் இருந்து தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரமான கொலோனியா டி சான்ட் ஜோர்டிக்கு அருகே புதன்கிழமை மாலை இந்த குற்றம் நடந்தது.
சம்பவம் இடம்பெற்ற வீட்டிங்கு போலீசார் சென்ற போது குறித்த நபர் மட்மே வீட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்கான நோக்கம் என்ன என்பது தொடர்பில் எதுவித தகவலும் போலீசார் வெளியிடவில்லை. ஆனால் குளிர்சாதன பெட்டியில் பீர் இல்லை என்பதையும், மேலும் வாங்க அவரிடம் பணம் இல்லை என்பதையும் கண்டறிந்த பின்னர் அந்த நபர் கோபமடைந்தே கொலை இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.