சூரிச் விமான நிலையம் : மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் கஞ்சா செவ்வாய்கிழமை மாலை, சூரிச் கன்டோனல் போலீசார் விமான நிலையத்தில் ஒருவரை கைது செய்தனர். குறித்த நபர் தனது பயணப் பையில் சுமார் 50 கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தார்.
செவ்வாய்கிழமை மாலை, சூரிச் கன்டோனல் பொலிசார் விமான நிலையத்தில் அவரது பொதிகளில் சுமார் 50 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தனர் . சூரிச் கன்டோனல் போலீசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மத்திய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் ஜூரிச் கன்டோனல் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில், சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த லக்கேஜுடன் 18 வயது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாங்காக்கில் இருந்து ஸ்பெயினுக்கு சென்று கொண்டிருந்தார்.
சூரிச்சில் புறப்படும் வாயிலில் அவரை சூரிச் கன்டோனல் போலீசார் கைது செய்து விசாரித்தனர் . இதன்போதே அவர் கஞ்சா எடுத்துச்சென்றமை கண்டபிடிக்கப்பட்டது. குறித்த இளைஞன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.