சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் புகலிடம் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26% குறைந்துள்ளது.
இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2% குறைவு என தெரிவிக்கப்படுகிறது.. பொதுவாக, ஆகஸ்ட் மாதத்தில் புகலிட விண்ணப்பங்கள் ஜூலை மாதத்தை விட அதிகமாக இருக்கும், ஆனால் இந்த ஆண்டு வேறுபட்டு காணப்படுவதாகவும் இடம்பெயர்வுக்கான பெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இடம்பெயர்வுக்கான பெடரல் அலுவலகம் 18,599 புகலிட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இவர்களில், 3,000 பேர் ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் என்பதால், அவர்கள் புகலிட அமைப்பில் கூடுதல் அழுத்தம் கொடுக்கவில்லை.

ஆகஸ்டில் 632 விண்ணப்பங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வருகைதந்தவர்களே அதிக புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ளனர். இவர்களில் கால் பகுதியினர் சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களிடமிருந்து வந்தவர்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் பல புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட பிற நாடுகள் துருக்கி, அல்ஜீரியா மற்றும் எரித்திரியா ஆகும்.
இடம்பெயர்வுக்கான பெடரல் அலுவலகம் ஆகஸ்ட் மாதத்தில் நிலுவையில் உள்ள புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைத்து தற்போது12,390 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இடம்பெயர்வுக்கான பெடரல் அலுவலகம் ஆகஸ்டில், 2,849 வின்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்து அவற்றில் மூன்றில் ஒரு பங்கிற்கு ஒப்புதல் அளித்தது. மீதமுள்ளவர்களில் 780 பேர் சொந்தமாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 295 பேர் தங்கள் சொந்த நாடு, அல்லது மூன்றாவது நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..