சுவிட்சர்லாந்தில் விரைவில் அச்சு ஊடகங்களில் புகையிலை விளம்பரங்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேசிய கவுன்சில் இந்த யோசனையை நிராகரித்த போதிலும்இ தடையை ஆதரிப்பதற்கு மாநிலங்கள் கவுன்சில் திங்களன்று வாக்களித்தது.
2022 இல், 56.6% சுவிஸ் வாக்காளர்கள் ‘புகையிலை விளம்பரம் இல்லாத குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்’ என்ற முயற்சிக்கு ஒப்புதல் அளித்தனர்.

இந்த முயற்சியானது குழந்தைகள் பார்க்கக்கூடிய அனைத்து புகையிலை விளம்பரங்களையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்போதுஇ அச்சு ஊடகங்களிலும்இ இளைஞர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளிலும் புகையிலை விளம்பரங்களைத் தடைசெய்யும் சட்டத்தை அரசாங்கம் புதுப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.