திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோட்ஹார்ட் சுரங்கப்பாதை இன்று இரவு முதல் நாளை வரை வாகனபோக்குவரத்துகளுக்காக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரி கன்டோனின் Göschenen மற்றும் டிசினோ கன்டோனின் Airolo ஆகிய இரு திசைகளையும் இந்த வீதி மூடல் பெருமளவு பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இரவு 8:00 மணி முதல் காலை 5:00 மணி வரை இவ்வாறு வீதி மூடப்பட்டிருக்கும் எனவும், இந்த நேரங்களில், கோட்டார்ட் பாஸ் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று செப்டம்பரில் மேலும் சில தினங்களில் பாதையை மூடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. செப். 9 முதல் 13 வரையும், 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும், 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையும் சுரங்கப்பாதை மூட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரவுநேர மூடல்கள் இருந்தபோதிலும், வார இறுதி நாட்களில் சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு திறந்திருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.