சூரிச் – தல்வில் பகுதியிலுள்ள எரிவாயு நிலையக் கடையில் கொள்ளை இன்று சனிக்கிழமை அதிகாலை, சூரிச் கன்டோனின் தல்விலில் உள்ள எரிவாயு நிலையக் கடையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலை 6:30 மணிக்கு சற்று முன், முகமூடி அணிந்த நபர் தல்விலில் (THALWIL) உள்ள எரிவாயு நிலையக் கடைக்குள் நுழைந்தார். சூரிச் கன்டோனல் பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ஊழியரை ஆயுதம் காட்டி மிரட்டி, பணத்தை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்திதாக தெரிவிக்கின்றனர்.

அங்கிருந்து பல நூறு பிராங்குகளை கொள்ளையடித்துவிட்டு குற்றவாளி தப்பியோடியுள்ளான். எனினும் கடை ஊழியருக்கு எது வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக சூரிச் கன்டோனல் போலீசார் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.