சுவிட்சர்லாந்தில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து புதிய வகை மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக ஷாஃப்ஹவுசன் போலீசார் எச்சரித்துள்ளனர்.
‘மீட்பு மோசடி’ – Recovery Scam என்றழைக்கப்படும் இவ்வகை மோசடி ஏற்கனவே இவ்வாறான போலியான பண மோசடிகளில் ஏமாந்தவர்களை குறிவைத்து மீண்டும் சிக்கவைக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை மீட்டெடுக்க உதவுவதாக மோசடிக்காரர்கள் உறுதியளிக்கிறார்கள்.
இந்த மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசாங்க நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள் அல்லது புலனாய்வு சேவைகளின் அதிகாரிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.
எந்தவொரு உதவியும் வழங்கப்படுவதற்கு முன், பாதிக்கப்பட்டவர்களை விரைவாகச் செயல்படுமாறும், முற்பணத்தை செலுத்துமாறும் அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில், மீட்பு மோசடியில் ஈடுபடுபவர்கள் ஏற்கனவே மோசடி செய்த அதே நபர்களாக இருக்கின்றமையும் வேடிக்கையானதும் அதிர்ச்சியானதுமான விடயமாக இருக்கிறது.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உங்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதாக யாரேனும் சமூகவலைத்தளம் அல்லது மின்னஞ்சல் வழியாக உங்களை அனுகினால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் சுவிஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Quelle: Schaffhauser Polizei / SKPPSC
Bildquelle: Schaffhauser Polizei / SKPPSC