டெல் அவிவ் மற்றும் பெய்ரூட்டுக்கு விமானங்கள் ரத்து மீண்டும் நீடிப்பு சுவிட்சர்லாந்தில் இருந்து டெல் அவிவ் மற்றும் பெய்ரூட்டுக்கு விமானங்களின் ரத்து மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
நான்காவது சுற்று நீட்டிப்புகளில், Swiss ஏர்லைன்ஸ், சூரிச் மற்றும் இரண்டு மத்திய கிழக்கு நகரங்களுக்கு இடையேயான அதன் விமானங்களை நிறுத்தி வைக்கின்றது.

குறிப்பிட்ட பிராந்தியத்தில் தொடர்ந்து இடம்பெறும் அரசியல் ஏற்ற இறக்கம் மற்றும் பிரச்சினைகள் காரணமாக ஆகஸ்ட் 26 திங்கள் வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது..
எனினும் முன்பு போலவே, இடைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்கள் விமானங்களை மீண்டும் முன்பதிவு செய்யும் அல்லது ரத்து செய்யும் விருப்பத்தை விமான நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.