சுவிஸ் மருத்துவமனைகளில் அதிகமான ஜெர்மன் நோயாளிகள் “ஜெர்மனியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டதால் அதிகமான ஜெர்மன் நோயாளிகள் சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த போக்கு குறிப்பாக சுவிஸ் எல்லைப் பகுதிகளான Basel, Aargau மற்றும் Schaffhausen போன்றவற்றில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகறது.
அங்கு ஆயிரக்கணக்கான ஜேர்மனியர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அதிகரிப்பு குறிப்பாக மகப்பேறு வார்டுகளில் உள்ளது,.
சில சுவிஸ் கிளினிக்குகள் பிரசவிக்கும் பெண்களில் 40 சதவீதம் வரை ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கின்றன.