சுவிட்சர்லாந்தில் வார இறுதியில் மழையுடன் கூடிய வானிலை அண்மையை நாட்களில் சுவிற்சர்லாந்தில் மிகவும் வெப்பமான மற்றும் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவிவந்தது.
இந்நிலையில் நாளை சனிக்கிழமை தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை முதல் வெயில் மற்றும் வெப்பமான வானிலை திரும்பும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிப்பதால், குளிர்ச்சியான காலநிலை குறுகிய காலமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.